Home /News /entertainment /

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் படத்தில் இணையும் பிரியங்கா மோகன்…

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் படத்தில் இணையும் பிரியங்கா மோகன்…

நடிகை பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன்

கிரே மேன், திருச்சிற்றம்பலம் படங்கள் தனுஷிற்கு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனுஷ் – இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட பிரியங்கா மோகன் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளதால், அவரை படத்தில் இடம்பெற வைப்பதற்கு படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

தனுஷ் தற்போது அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேனின் வெளியீட்டை எதிர்நோக்கியுள்ளார். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர் 

இதன்பின்னர் ஜூலை 22-ம்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கிரே மேன் படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் முக்கிய வேடத்தை கொடுத்துள்ளனர். 2 சண்டைக்காட்சிகளில் தனுஷ் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த ஜெகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் கிரே  மேன் மற்றும் அதற்கு பின்னர் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படங்கள் தனுஷிற்கு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க - சூர்யாவுடன் இரும்பு கை மாயாவி படத்தில் இணையும் லோகேஷ் கனகராஜ்

இதற்கிடையே இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் இயக்கிய ராக்கி திரைப்படமும் நல்ல விமர்சனங்களை அளித்தன.

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்கவுள்ள ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு நடிகை பிரியங்கா மோகனிடம் பேசப்பட்டு வந்த நிலையில், அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Dhanush

அடுத்த செய்தி