செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் அவரது தந்தை கஸ்தூரிராஜாவின் பெயரில் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்தது தனுஷின் திரை வாழ்க்கை. அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் அடுத்து வெளியான காதல் கொண்டேன் தனுஷை, "யார் இது?" என்று கேட்க வைத்தது. புதுப்பேட்டை தனுஷ் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தது. மயக்கம் என்ன திரைப்படம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
செல்வராகவனுடன் தனுஷ் இணையும் போதெல்லாம் ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கிறது. ரசிகர்கள் பல ஆண்டுகளாக இந்த அண்ணன் - தம்பி காம்பினேஷனுக்காக காத்திருந்தனர். விரைவில் தனுஷை வைத்து இரு படங்கள் இயக்குவதாக செல்வராகவன் அறிவித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. முதல் படமாக நானே வருவேன் தயாராகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தப் படத்தை
தாணு தயாரிக்க, செல்வராகவன் இயக்க, தனுஷ் நடிக்கிறார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற மாஸ்டர் பீஸ்களில் செல்வராகவனுடன் இணைந்து நின்ற யுவனும், ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவும்
நானே வருவேனில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில்
தனுஷ் நடிப்பார் என்கின்றன செய்திகள்.
ஜகமே தந்திரத்தால் ஏமாற்றப்பட்ட ரசிகர்களுக்கு இது பூஸ்ட் செய்தி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்