‘தங்கமகன்’ படத்துக்கு பின்னர் மீண்டும் இணையும் தனுஷ் -அனிருத் கூட்டணி

5 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளது.

‘தங்கமகன்’ படத்துக்கு பின்னர் மீண்டும் இணையும் தனுஷ் -அனிருத் கூட்டணி
தனுஷ் - அனிருத் கூட்டணி
  • Share this:
தனுஷின் ‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பளராக வலம் வரும் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள். அதனால் அவருக்கு திரைபிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில் தனுஷ் - அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘3’ படம் தொடங்கி ‘தங்கமகன்’ வரை தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளியான பெரும்பாலான பாடல்கள் ஹிட் அடித்திருப்பதால் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகும் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இயக்குநர் யார் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் அத்ரங்கி ரே, தமிழில் மாரி செல்வராஜ் உடன் கர்ணன், கார்த்திக் நரேன், ராம்குமார் ஆகிய இயக்குநர்களின் படங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் அதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading