ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விவாகரத்து முடிவை மாற்றிய தனுஷ்- ஐஸ்வர்யா? வெளியான புதிய தகவல்!

விவாகரத்து முடிவை மாற்றிய தனுஷ்- ஐஸ்வர்யா? வெளியான புதிய தகவல்!

தனுஷ்-ஐஸ்வர்யா

தனுஷ்-ஐஸ்வர்யா

தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து முடிவை கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தங்களுடைய விவாகரத்து திட்டத்தை கைவிட  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள், '' 18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.


  விவாகரத்து அவர்களின் தனிபட்ட விஷயம் என்றாலும், இருவரும் இணைந்தே இருக்கலாம் என ரசிகர்கள் விரும்பினர்.  மகன்களுக்காக இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்தனர். அதேசமயம் இருவரும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு தங்களின் வேலை சம்மந்தனாக சென்ற போதும் ஒன்றாகவே தங்கினர் என்று கூறப்பட்டது.

  இதையும் படிங்க: 'அப்பாவின் அன்பு! விலைமதிப்பற்ற போட்டோ!' ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் பகிர்ந்த ஐஸ்வர்யா!

  மேலும் மகன்களின் பள்ளி நிகழ்ச்சியிலும் அவர்கள் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகின. இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தாலும் அது அடுத்தக்கட்ட பிரிவைபிரிவை நோக்கி நகரவில்லை என கூறப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் அவர்கள் இருவரிடமும் ஒன்று சேர்வது குறித்து பேசி வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்கள் தங்கள் முடிவை திரும்ப பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor dhanush, Aishwarya Dhanush