Home /News /entertainment /

மகன் யாத்ராவால் மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

மகன் யாத்ராவால் மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

தனுஷ் ஐஸ்வரியா ரஜினிகாந்த்.

தனுஷ் ஐஸ்வரியா ரஜினிகாந்த்.

தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பரஸ்பரம் புரிதலின் பேரில் பிரிந்து வாழ்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India


    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் அவரது கணவர் தனுஷும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வரியா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை மணந்தார். அவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மணவாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். சட்டப்பூர்வமாக விவாகரத்துப் பெறவில்லை என்றாலும் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவின் மூத்த மகனான யாத்ரா அவரது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான விழா இன்று சென்னையில் அவரது பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து கலந்துகொண்டுள்ளனர்.

    தனுஷுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது மகன்கள்.


    அப்போது இருவரும் தங்களது மகனோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அப்புகைப்படத்தில் தங்கள் இரு மகன்கள் மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருடன் இருவரும் மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கின்றனர்.



    ஆனால் இப்புகைப்படத்தை ஐஸ்வர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரவில்லை. அவர் தன்னுடைய முதல் மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்வது பெருமையாக இருக்கிறது என்று மட்டுமே பதிவிட்டுள்ளார். அவர் மகன் பொறுப்பேற்றுக்கொள்ளும் வைபவத்தை அவர் புகைப்படம் எடுப்பது போல் உள்ள புகைப்படத்தை மட்டும் அவர் பகிர்ந்துள்ளார்.

    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Aishwarya Rajinikanth, Dhanush

    அடுத்த செய்தி