தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக நேற்றிரவு (திங்கள்கிழமை) அறிவித்தனர். பிரிந்து செல்வதற்கான அவர்களின் முடிவு குறித்து அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் புரொஃபைல் படத்தை மாற்றி தனது சகோதரி ஐஸ்வர்யாவுக்கு தன் ஆதரவைக் காட்டியுள்ளார்.
செவ்வாய்கிழமை அதிகாலையில், சௌந்தர்யா தனது ட்விட்டர் சுயவிவரப் படத்தை, அக்கா ஐஸ்வர்யா மற்றும் அப்பா ரஜினிகாந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படமாக மாற்றினார். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது எடுத்த அந்த த்ரோபேக் படத்தில், ரஜினிகாந்தின் மடியில் அமர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கும் படம் தான் அது.
Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!
ப்ரொஃபைல் பிக்சர்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து சௌந்தர்யா எதுவும் பேசாத நிலையில்,
ரசிகர்கள் அவருக்கும் ரஜினிகாந்தின் குடும்பத்தினருக்கும் அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். ”தேவையான நேரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கும்படி தன் குழந்தைகளை வளர்த்த சிறந்த அப்பா. வலுவாக இருங்கள் சகோதரி.. உங்கள் சகோதரி, அவரது குழந்தைகள் மற்றும் உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று ஒரு ரசிகர் அந்த படத்திற்கு பதிலளித்தார்.
இதையும் படிங்க - Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா
மேலும் படிக்க - Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?
சௌந்தர்யாவும் முன்பு கணவரை பிரிந்து தலைப்புச் செய்தியானார். 2016-ஆம் ஆண்டில், தனது முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரிடமிருந்து பிரிந்த செளந்தர்யா, 2019-ல் விசாகன் வணங்காமுடியை மணந்தார்.
பிரபலங்களின் விவாகரத்து நல்ல ட்ரெண்ட் செட்டர்... சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா
இதற்கிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ல் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்கள் 2006-ல் தங்கள் முதல் மகன் யாத்ராவை பெற்றெடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இரண்டாவது மகன் லிங்கா பிறந்தார். 18 ஆண்டுகள் தம்பதிகளாக இருந்த ஐஸ்வர்யாவும், தனுஷும் தற்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.