Home /News /entertainment /

ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா?

ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா?

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா இன்னும் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்று தான் தனது சமூக வலைதள கணக்குகளின் பெயரை நீக்காமல் வைத்திருக்கிறார்.

    தங்கள் திருமண உறவிலிருந்து பிரிவதாக அறிவித்த தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தற்போது ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே வந்திருப்பது சாதாரண கணவன் - மனைவி சண்டை தான் என்றும், அதனால் அவர்கள் பிரிந்திருப்பதாகவும், இது விவாகரத்து இல்லை எனவும் பேட்டியில் தெரிவித்தார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. அதோடு இருவரும் தற்போது ஐதராபாத்தில் இருப்பதாகவும், அவர்களிடம் தொடர்ந்து குடும்பத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனால் அவர்கள் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு பொதுவாக பிரபலங்கள் தங்கள் கணவரை விட்டு பிரியும் போது, பெயருக்குப் பின்னால் இருக்கும் அவரின் பெயரையும் நீக்கி விடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா இன்னும் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்று தான் தனது சமூக வலைதள கணக்குகளின் பெயரை நீக்காமல் வைத்திருக்கிறார். இதையடுத்து கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்கள் விரைவில் இணைவார்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    இந்நிலையில் தனுஷ் தற்போது தமிழ் / தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருக்கிறார். ஐஸ்வர்யாவும் தனது பட வேலைகளுக்காக அங்கு தான் இருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்களாம். தாங்கள் இப்படி ஒரே இடத்தில் இருப்பது அவர்களுக்கும் தெரியுமாம். இதனால் அவர்கள் சந்தித்து பேசினார்களா? தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்களா என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி