Home /News /entertainment /

Dhanush Aishwarya : ரஜினிகாந்தை சந்திப்பதை தவிர்த்தாரா தனுஷ்..?

Dhanush Aishwarya : ரஜினிகாந்தை சந்திப்பதை தவிர்த்தாரா தனுஷ்..?

தனுஷ் - ஐஷ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். தற்போதைய தகவலின்படி, இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொள்ளவில்லை. இதனால், பிள்ளைகளின் பெற்றோராக இருவரும் தொடர்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
    தனுஷ் - ஐஷ்வர்யா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், ரஜினிகாந்தை சந்திப்பதை தனுஷ் தவிர்த்து வந்ததாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.

    கடந்த 18 ஆண்டுகளாக நட்சத்திர ஜோடிகளாக இருந்து வந்த தனுஷ் - ஐஷ்வர்யா ஆகியோர் தாங்கள் சுமுகமாக பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகையும் தாண்டி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    18 ஆண்டுகளாக இருவரும் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காத நிலையில், பிரிவு ஏற்பட்டிருப்பது ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது. இதற்கிடையே தனுஷ் - ஐஷ்வர்யா இடையே கருத்து வேறுபாடு இருப்பது தனுஷின் முன்னாள் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கவனத்திற்கு சென்றுள்ளது.

    அவரும், இந்த விவகாரத்தை சுமுகமாக பேசிய முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனுஷை சந்திக்க ரஜினிகாந்த் முற்பட்டபோது, தனுஷ் சந்திக்க மறுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இதையும் படிங்க : இது கனவாக இருக்கக் கூடாதா? தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

    அதேநேரம் மாமனார் ரஜினிகாந்தின் மேலுள்ள மரியாதை காரணமாக, தனுஷ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தனுஷ் - ஐஷ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். தற்போதைய தகவலின்படி, இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொள்ளவில்லை. இதனால், பிள்ளைகளின் பெற்றோராக இருவரும் தொடர்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த திங்களன்று தனுஷ் வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளில், '18 ஆணடுகளாக எனக்கும் ஐஷ்வர்யாவுக்கும் இடையே இருந்து வந்த நட்பு, உறவு முடிவுக்கு வருகிறது. வளர்ச்சி, புரிந்துணர்தல், ஏற்றுக் கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல் என பல உணர்வுகளையும் தாண்டி இந்த உறவு நீடித்தது. இன்றைக்கு இருவரும் அவரவர் பாதையில் செல்வதற்கு முடிவு எடுத்துள்ளோம். எங்களது முடிவுக்கு மதிப்பு அளித்து, எங்களது தனியுரிமைக்கு மரியாதை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார்.

    இதையும் படிங்க : ஐந்து நாயகிகளுடன் தயாராகும் சைக்கோ கில்லர் திரைப்படம்...!
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush

    அடுத்த செய்தி