Home /News /entertainment /

பிரபலங்களின் விவாகரத்து நல்ல ட்ரெண்ட் செட்டர்... சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா

பிரபலங்களின் விவாகரத்து நல்ல ட்ரெண்ட் செட்டர்... சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா- ஐஸ்வர்யா - தனுஷ்

ராம் கோபால் வர்மா- ஐஸ்வர்யா - தனுஷ்

கடந்த அக்டோபர் மாதம் தனுஷ் தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றபோது, அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஐஸ்வர்யா, பெருமைமிகு மனைவி எனக் குறிப்பிட்டிருந்தார்.

    பிரபலங்களின் திருமண முறிவு குறித்த விஷயத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    சமீபமாக பிரபலங்களின் திருமண முறிவு மற்றும் விவாகரத்து விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தா - நாகசைத்தன்யா திருமண பிரிவு செய்தியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்த இடியாக தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண பிரிவு வெளியாகியிருக்கிறது.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தா - நாக சைத்தன்யா ஜோடி, கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டது. கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவரது வாழ்க்கையில் யார் கண் பட்டதோ, இருவரும் திருமண உறவில் இருந்து விலகுவதாக கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் அறிவித்தனர். இது சமந்தா - நாகசைத்தன்யா ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. இதிலிருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண முறிவு செய்தி வெளியாகியிருக்கிறது.

    Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

    தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ல் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அவர்கள் 2006-ல் தங்கள் முதல் மகன் யாத்ராவை பெற்றெடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இரண்டாவது மகன் லிங்கா பிறந்தார். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த ’3’, மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ ஆகியப் படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.

    Dhanush Aishwarya: அக்கா ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

    கடந்த அக்டோபர் மாதம் தனுஷ் தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றபோது, அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஐஸ்வர்யா, பெருமைமிகு மனைவி எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தங்களின் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக நேற்றிரவு தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

    Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!



    Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

    இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, “நட்சத்திரங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகளைப் பற்றி இளைஞர்களை எச்சரிக்கும் நல்ல ட்ரெண்ட் செட்டர்கள்” என விவாகரத்துகளை ஆதரிப்பது போல் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Actress Samantha, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி