Home /News /entertainment /

Dhanush Aishwarya Rajinikanth: பிரிவு செய்திக்கு பிறகு டிரெண்ட் ஆகும் தனுஷ், ஐஸ்வர்யாவின் ரொமான்ஸ் வீடியோ!

Dhanush Aishwarya Rajinikanth: பிரிவு செய்திக்கு பிறகு டிரெண்ட் ஆகும் தனுஷ், ஐஸ்வர்யாவின் ரொமான்ஸ் வீடியோ!

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா - தனுஷ்

வீடியோவில் நடிகர் தனுஷ் பாடல்களை பாட, அதை கேட்டு அவரின் மனைவி ஐஸ்வர்யா வெட்கப்படுகிறார்.

    சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திடீர் விவாகரத்தையே இன்னும் ஜீரணித்து முடிக்காத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து செய்தி வந்து நிற்கிறது.

    இந்த சோகமான நேரத்தில், நடிகர் தனுஷ் அவர் மனைவியுடன் சேர்ந்து கலந்து கொண்ட பார்ட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் தனுஷ் பாடல்களை பாட, அதை கேட்டு அவரின் மனைவி ஐஸ்வர்யா வெட்கப்படுகிறார்.

    அந்த வீடியோவில் தனுஷ் பாடும் பாடலானது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் வந்த "இளமை திரும்புதே" என்கிற பாடலே ஆகும். அந்த பாடலை தனுஷ் பாடும் போது தான் அவரின் மனைவி ஐஸ்வர்யா வெட்கப்பட்டு சிரிக்கிறார்.

    இந்த வீடியோ வெளியாகி 1 வருடம் கூட ஆகாத நிலையில் இருவரும் பிரிந்து விட்டனரே! என்ன ஆகிற்று? என்ன காரணம் என்று கூட தெரியவில்லை! என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் புலம்பி தள்ளிய வண்ணம் உள்ளனர்.

    மேலும் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து பிரிந்துள்ள நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவின் இந்த விவாகரத்து முடிவை தாங்க முடியாத ரசிகர்கள் குறிப்பிட்ட "இளமை திரும்புதே பாடல் வீடியோ"வை சமூக ஊடங்களில் ஷேர் செய்து தத்தம் வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    Dhanush Aishwarya Rajinikanth: உங்கள் பாதை ஒன்றாகும் என நம்புகிறேன் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பிரிவு குறித்து ஆர்த்தி

    கடந்த 18 வருடங்களாக நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், ஒருவர் மற்றொருவரின் நலம் விரும்பியாகவும் வாழ்ந்து வந்த தானும் தனது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக நடிகர் தனுஷ் இன்று அறிவித்துள்ளார். நினைவூட்டும் வண்ணம் ஐஸ்வர்யா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், திரைப்பட இயக்குனரும், பின்னணிப் பாடகியும் ஆவார்.

    பிரபலங்களின் விவாகரத்து நல்ல ட்ரெண்ட் செட்டர்... சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா

    இந்த விவாகரத்து செய்தியை அறிவிக்க தனுஷ் ட்விட்டரை பயன்படுத்திக்கொண்டார். அதில், "18 வருடங்கள் நண்பர்களாக, தம்பதிகளாக பெற்றோர்களாக மற்றும் ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாக வாழ்ந்தோம். எங்களின் இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், சரிசெய்தல் மற்றும் மாற்றமடைந்து கொள்வதாகவே இருந்தது. இன்று நாங்கள் ஒரு இடத்தில் நிற்கிறோம். இங்கே எங்கள் பாதைகள் பிரிகின்றன. ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை நாங்களே இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் எடுக்கும்." என்று தனுஷ் பதிவிட்டுள்ளார்.



    நடிகர் தனுஷ் அந்த பதிவுக்கு "தயவுசெய்து எங்கள் முடிவை மதிக்கவும், இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும். ஓம் நமசிவாய!" என்கிற தலைப்பையும் இட்டுள்ளார்.

    Dhanush Aishwarya: அக்கா ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

    தனுஷின் மனைவியும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் அதே அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதன் வழியாக அவர்... "தலைப்பு தேவையில்லை... உங்கள் புரிதலும் உங்கள் அன்பும் மட்டுமே அவசியம்!" என்று கூறியுள்ளார்.

    Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஸ்டார் தம்பதியருக்கு 2006 மற்றும் 2010-இல் பிறந்த யாத்ரா மற்றும் லிங்கா என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி