ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மகன் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

மகன் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா - தனுஷ்

தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களது தனிப்பட்ட வேலைகளுக்காக ஹைதராபாத்தில் இருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அப்பா அம்மா இருவரும் பிரிவை அறிவித்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு ஐஸ்வர்யா தனுஷின் மகன் யாத்ரா அளித்த பதிலால் அவர்கள் மிரண்டு போயிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

  நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

  இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், அம்மா, அப்பா விவாகரத்துக்குப் பிறகு யாருடன் வாழ விரும்புகிறீர்கள் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் யாத்ராவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு இதே கேள்வியை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்களோ, அது தான் எனது பதில் என்று பதிலளித்தாராம் யாத்ரா.

  தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களது தனிப்பட்ட வேலைகளுக்காக ஹைதராபாத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆகையால் மகன்களுக்காக அவர்கள் தங்கள் முடிவை பரிசீலனை செய்வார்கள் என குடும்பத்தினர் நம்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Rajinikanth