Home /News /entertainment /

Dhanush Aishwarya Rajinikanth: தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் - ஆச்சர்யப்படாத நண்பர்கள்!

Dhanush Aishwarya Rajinikanth: தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் - ஆச்சர்யப்படாத நண்பர்கள்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

Dhanush Aishwarya Rajinikanth: தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் தனிப்பட்ட தேர்வுகளின் காரணமாக சமீப ஆண்டுகளாக பிரிந்திருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள்.

  கடந்த திங்கட்கிழமை இரவு, தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அதில் தானும் தனது மனைவி ஐஸ்வர்யாவும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து சுமூகமாக பிரிய முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவும் இதே போன்ற வார்த்தைகள் அடங்கிய அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், "தலைப்பு தேவையில்லை... உங்கள் புரிதலும் உங்கள் அன்பும் மட்டுமே அவசியம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

  இருவரும் ஒன்றாக வெளியிட்ட அந்த அறிக்கையில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

  இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

  இதை முதலில் நம்பாத தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்மையை உணர்ந்து மனவேதனை அடைந்தனர். ஒரு ரூஃப் டாப் பார்ட்டியில் ஐஸ்வர்யாவுக்காக தனுஷ் பாடிய இளமை திரும்புதே (ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் பாடல்) பாடல் வீடியோவையும் சிலர் பகிர்ந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுக்காக ஒன்றாக இருக்க வேண்டும் என விவாதங்களும் எழுந்தன.

  Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...  கடந்த பல ஆண்டுகளாக, தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக நிறைய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பெரும்பாலான தம்பதிகளைப் போலவே தங்கள் திருமண உறவின் பிரச்னைகளையும் சரிசெய்துக் கொண்டனர். 2021 டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில், ஐஸ்வர்யாவும் தனுஷின் சகோதரிகளும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா திருமண உறவு குறித்த முணுமுணுப்புகள் எழுந்தன. இருப்பினும், இந்த முறையும் அவர்கள் பிரச்னைகளை கடந்து சமநிலைக்கு வருவார்கள் என்று நம்பினார்கள் தனுஷ் ஐஸ்வர்யாவின் நண்பர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இறுதியில் அது பொய்யானது.

  தனுஷ்-ஐஸ்வர்யா காதல் கதை

  இருவருக்குமிடையேயான அறிமுகம் 2003-ல் நிகழ்ந்திருக்கிறது. தனுஷின் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தைப் பார்த்த ஐஸ்வர்யா, அவரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்தை அனுப்பியிருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அவரை அழைத்திருக்கிறார் தனுஷ். இப்படி நட்பாக தொடங்கிய இந்த சந்திப்பு படிப்படியாக காதலாக மாறியிருக்கிறது. அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வெளிவரத் தொடங்கியதும், இருவரின் குடும்பமும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர். அப்போது 23 வயதான ஐஸ்வர்யா, தன்னை விட 2 வயது இளையவரான தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2006-ல் யாத்ராவும், 2010-ல் லிங்காவும் பிறந்தனர்.

  தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?

  2011-ஆம் ஆண்டில், தனுஷின் சகோதரரும் இயக்குநருமான செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த ஐஸ்வர்யா, இயக்குநராக முடிவு செய்தார். அவர் இயக்கிய 3 படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக தனுஷை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். மார்ச் 2012-ல் வெளியான அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலவையான வரவேற்பைப் பெற்றாலும், படத்தின் ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் வைரலானது, அதோடு தேசிய அளவில் தனுஷுக்கு வாய்ப்பு கதவுகளை திறந்தது. 2015-ஆம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கிய இரண்டாவது படமான வை ராஜா வை படத்திலும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

  தனுஷ், ஐஷ்வர்யா


  தனுஷுக்கு வேலை, ஐஸ்வர்யாவுக்கு ஆன்மீகம்

  தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் தனிப்பட்ட தேர்வுகளின் காரணமாக சமீப ஆண்டுகளாக பிரிந்திருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். தனுஷ் வழக்கத்தை விட மிகவும் செழிப்பாக மாறினார், பல படங்களில் கையெழுத்திட்டார், இதன் விளைவாக அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிடவில்லை. இதற்கிடையே, ஐஸ்வர்யாவும் ஆன்மீகத்தில் ஆறுதல் தேடத் தொடங்கினார். தனுஷ் சக நடிகைகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக வெளியான வதந்திகளும் பிரிவை அதிகமாக்கியிருக்கிறது. "அவர்களின் திருமண உறவில் சிக்கல்கள் இருந்தன, அதனால் அவர்கள் பிரிவதாக வெளியான அறிவிப்பு அவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு ஆச்சரியமாக இல்லை" என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். தங்கள் திருமண நிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் குறித்து மதிப்பாய்வு செய்ய லாக்டவுன் அவர்களுக்கு உதவியதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார். யோகா, உடற்பயிற்சி, மற்றும் ஆன்மீகத்தில் லயித்த மனதையும் வளர்த்துக் கொண்ட ஐஸ்வர்யாவுக்கு, திருமண உறவில் இருப்பது அவசியமாகவோ அல்லது முன்னுரிமையாகவோ இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

  தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்... பதில் சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்!

  இதற்கிடையே நேற்று WE ARE WITH U DHANUSH ANNA என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள் தனுஷ் ரசிகர்கள். மறுபுறம் ரஜினிகாந்தின் ரசிகர்கள், அவரை வலிமையாக இருக்கும்படி வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

  அடுத்த செய்தி