தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு அவர்களது பெர்சனல் விஷயம். அது நாட்டுக்கு முக்கியமான விஷயமா என ரசிகர்களையும், நெட்டிசன்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகை ஷகீலா.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை இரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.
அந்த அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!
இதைக் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். மேலும் இந்த பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என பல்வேறு விஷயங்களை இணையத்திலும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ஷகீலா, தனது யூ-ட்யூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா 3-ம் அலையில் இருக்கிறோம். குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல முக்கியமான விஷயங்கள் நாட்டில் இருக்கும் போது தற்போது அனைவரும் ஃபோகஸ் செய்வது தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவைத்தான். அவர்கள் 18 வருடம் கணவன் - மனைவியாக வாழ்ந்து ஒரு கட்டத்தில் ஒத்து வராது என பிரிந்திருக்கிறார்கள். இதை விமர்சனம் செய்ய நாம் யார்? சமந்தாவை எவ்வளவு கேவலப்படுத்தினார்கள். கிறிஸ்டியன் - இந்து என இரு முறைப்படியும் பிரமாண்டமாக நடந்த திருமணம் அது. அப்படி இருக்கையில் அது வேண்டாம் என பிரிந்திருக்கிறார்கள் என்றால் அது அவர்களது பெர்சனல்.
நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
உங்கள் வீட்டில் அக்கா அல்லது தங்கை டைவர்ஸ் செய்தால் அப்படி பேச உங்களுக்கு மனம் வருமா? எதிர்வீட்டு பையனுடன் காதல், அதனால் தான் டைவர்ஸ் ஆகிவிட்டது என வாய்கூசாமல் உங்களால் பேச முடியுமா?
தனுஷ் குழந்தைகள் பற்றி ஏன் நீங்க கவலைப்படுறீங்க, உங்க குழந்தைகளை நல்லா பாத்துக்கிறீங்களா? அதை முதல்ல பாருங்க. ரஜினி பேர பசங்களை பத்தி அப்புறம் பாக்கலாம். அவர்களுக்கு நடுவில் என்ன நடந்தது என தெரியாமல் நீங்கள் பேசுறீங்க. சினிமாக்காரர்கள் என்பதால் தான் இப்படி பேசுறீங்க.
முதன் முறையாக மகனின் படத்தை பதிவிட்ட கஸ்தூரி - ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!
சிம்புவை ஏன் இப்போ இழுக்குறீங்க. அவர் யாரை கல்யாணம் பண்ண போறார்னு ஏன் இப்போ பேசுறீங்க. சூப்பர்ஸ்டாரும் மனுஷன் தான். பெற்ற மகள் என்பதால் அவருக்கு எப்படி வயிறு எரியும். கமல் மகள்களை பற்றி அவ்ளோ மோசமா பேசுறீங்க. அவங்க அரை குறை உடையில் ஆடுறாங்கன்னு சொல்றீங்க. பிடிக்கலைன்னா பார்க்காதீங்க.
சமந்தாவுக்கு நாக சைதன்யா 200 கோடி கொடுத்ததா சொல்றீங்க. நீங்க போய் பாத்தீங்களா, எனக் கோபமாக விளாசியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush