ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி பேச தனக்கு உரிமை இல்லை என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் கணவன் - மனைவிக்குள் வந்திருக்கும் சாதாரண சண்டை தான் வந்துள்ளது எனவும், வேறுபாடுகளை களைந்து அவர்கள் விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.
Baakiyalakshmi: ராதிகா வீட்டில் பாக்யாவிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் கோபி
இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களிலும், ஐஸ்வர்யா தான் இயக்கும் பயணி மியூசிக் வீடியோவிலும் பிஸியாகினர். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவை சந்தித்த நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், ”தங்கச்சியை சந்தித்தது ரொம்ப சந்தோஷம், நாங்க சந்தித்த காரணத்தை தங்கச்சி அதிகாரப்பூர்வமா சீக்கிரமே அறிவிப்பாங்க. அதுவரைக்கும், என்னால எதுவும் சொல்ல முடியாது. அவங்க வாழ்க்கையில நடக்குற விஷயங்களைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்ல.
மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு... விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2!
ஆனா, என் தங்கச்சி எப்போவும் சந்தோஷமா இருக்கணும். நல்லா வரணும். எனக்கு லைப் கொடுத்தவர் தலைவர். அவரோட வீட்டு பொண்ணுங்க எப்போவும் நல்லா இருக்கணும்” என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
வலிமை வசூல் - விமர்சகர்களை நாய் என சாடிய தயாரிப்பாளர்
இதையடுத்து ராகவா லாரன்ஸுடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “சுவாரஸ்யமான ஒன்று உருவாகிறது...என் அன்பான லாரன்ஸ் அண்ணாவை சந்தித்த பிறகு என் மூளை துடிக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.