ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...

Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...

தனுஷ்

தனுஷ்

3 படத்தில் நடித்த போது அந்த நடிகையுடன் திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் நெருக்கம் காட்டிய தனுஷ், அவருடன் தனி வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நடிகர் தனுஷும் அவரது மனைவியும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் தங்கள் 18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக நேற்றிரவு அறிவித்தனர். அந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த செய்தி தலைப்பு செய்தியாக மாறியது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், 2002-ம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர். சில படங்களில் நடித்த நிலையில் 2004-ம் ஆண்டு பிரபல வார இதழில், ’எனக்கும் ரஜினி மகளுக்கும் காதலா’ என்ற தலைப்பில் தனுஷின் பேட்டி ஒன்று வெளியனது. ஆனால் அதுவரை அப்படியொரு விஷயமே வெளியில் யாருக்கும் தெரியாது. தனுஷின் அந்த பேட்டிக்குப் பிறகு தான், இந்த விஷயம் உண்மையாக இருக்குமா? ரஜினியின் மாப்பிள்ளையாவாரா தனுஷ்? என்ற ரீதியில் எதிர்பார்ப்பு எழத் தொடங்கியது.

இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலில் இருப்பதாக தமிழ் திரையுலகில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. பின்னர் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. வளர்ந்து வரும் ஒரு நடிகர் ரஜினியின் மருமகனானது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக நடிகர்களின் பிள்ளைகளும் நடிக்கவே ஆசைப்படுவார்கள். இதில் ரஜினிகாந்தின் இரு மகள்களும் விதிவிலக்கு. தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கி, அதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. கணவர் ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தின் கதையை மிகவும் ரொமாண்டிக்காக எழுதியிருந்த அவர், ஹீரோ - ஹீரோயின் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளையும் தாராளமாக வைத்திருந்தார்.

3 படத்தில் நடித்த போது அந்த நடிகையுடன் திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் நெருக்கம் காட்டிய தனுஷ், அவருடன் தனி வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் பிரச்னை பெரிதாக, ரஜினியே தலையிட்டு தீர்த்து வைத்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் உடன் நடித்த நடிகையுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு பிரபல இயக்குநரை மணந்துக் கொண்டார் அந்த நடிகை. ஆனால் திருமணம் செய்துக் கொண்ட வேகத்திலேயே விவாகரத்தும் ஆனது. அவர்களது விவாகத்துக்குக் காரணம் தனுஷ் தான் என்றும் கூறப்பட்டது.

பின்னர் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தை இயக்கினார் ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யா ரஜினிகாந்த். அந்தப் படத்திலும் தனுஷுடன் முதல் பாகத்தில் நடித்த நடிகையே நடித்தார். விஐபி 2 அறிமுக விழாவில் பேசிய அந்த நடிகை, ’நான் இனி தனுஷுக்கு உண்மையான மனைவியாக இருப்பேன்’ என்று கூறினார். இது படத்திற்கான ப்ரோமோஷனுக்காக பேசப்பட்டது என்றாலும், தமிழ் திரையுலகில் இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது.

பிரபலங்களின் விவாகரத்து நல்ல ட்ரெண்ட் செட்டர்... சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா

இப்படி உடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்குவதை வழக்கமாக வைத்திருந்தார் தனுஷ். இதனால் அவர் மீது மிகுந்த மனவருத்தத்தில் இருந்திருக்கிறார் ஐஸ்வர்யா. எப்போதும் வந்து செல்லும் பிரச்னை, இந்தமுறை மூன்று ஆண்டுகளாக நீடித்திருக்கிறது. இதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாத ஐஸ்வர்யா, தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து தனியாக யோகா சென்டர் ஒன்றை தொடங்கியுள்ளார். விஜபி-கள் பலர் வந்து யோகா கற்றுச் செல்லும் அந்த செண்டர் மூலம் கணிசமான வருமானமும் ஈட்டி வருகிறார் ஐஸ்வர்யா.

Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

சுச்சி லீக்ஸில் தனுஷ் விவகாரம் வெளிவந்ததுமே தனுஷ் - ஐஸ்வர்யா உறவில் ஆழமான விரிசல் விழுந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். உடன் நடித்த வேறொரு நடிகையுடன் தனுஷ் படுக்கையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் படம் அப்போது வெளியானது. நிச்சயதார்த்தத்தோடு அந்த நடிகையின் திருமணம் நின்ற நிலையில் அவர் தனுஷுடன் நெருக்கம் காட்டி வருவதாக செய்திகள் வலம் வந்தன. இப்படி பலமுறை பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார் தனுஷ்.

Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

இவற்றையெல்லாம் தாண்டி, 18 வருடங்களாக தனுஷ் - ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை நீடித்தது. சகிப்புத்தன்மை குறையும் இடத்தில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படித்தான் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் சுமூகமாக பிரிவதாக அறிவித்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush