Home /News /entertainment /

மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு செக் வைத்த லதா ரஜினிகாந்த்?

மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு செக் வைத்த லதா ரஜினிகாந்த்?

தனுஷ் - லதா ரஜினிகாந்த்

தனுஷ் - லதா ரஜினிகாந்த்

மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு லதா ரஜினிகாந்த், செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் பிரிந்த நிலையில் அவருக்கு லதா ரஜினிகாந்த் செக் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தனுஷ் தனது படங்களிலும், ஐஸ்வர்யா தனது பட வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான ஐஸ்வர்யா, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு லதா ரஜினிகாந்த், செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தனக்கு தெரிந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்ட லதா, இனி தனுஷுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கூறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு அவர் படங்களை தயாரிக்க, பணம் கொடுக்கக் கூடாது என்று சினிமா பைனான்ஸியர்களிடமும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மனைவியை பிரிந்த தனுஷ் தனது கவனத்தை திசை திருப்பும் வகையில், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நேரத்தில் அவருக்கு இப்படியொரு சோதனையா என வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். இருப்பினும் இது எந்தளவு உண்மை எனத் தெரியவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Dhanush, Tamil Cinema

    அடுத்த செய்தி