முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்... கதையைக் கேட்டு கண்ணீர் விட்ட கஸ்தூரி ராஜா?

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்... கதையைக் கேட்டு கண்ணீர் விட்ட கஸ்தூரி ராஜா?

கஸ்தூரி ராஜா - ஐஸ்வர்யா தனுஷ்

கஸ்தூரி ராஜா - ஐஸ்வர்யா தனுஷ்

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவித்தன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் மீண்டும் அவருடன் சேர விரும்பவில்லை எனவும், சமாதானப்படுத்த வந்த பெற்றோரிடம் தன் நிலையைக் கூறியதாகவும், அதைக் கேட்டு அவர்கள் கண்ணீர் விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவித்தன. குறிப்பாக மகள் ஐஸ்வர்யாவை தனுஷுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் தீவிரமாக இருப்பதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜாவும் இதில் முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்பட்டது.

கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை - நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'நீ ஐஸ்வர்யாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று அப்பாவும், அம்மாவும் தனுஷிடம் கூறினார்களாம். அதற்கு ’என் வாழ்க்கையில் என்ன நடந்ததென்றே உங்களுக்கு தெரியாது. ஐஸ்வர்யா எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?’ என தன் தரப்பு நியாயங்களை முன் வைத்தாராம்.

சன் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் ஃபலோ பண்ணும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

இதைக்கேட்ட தனுஷின் பெற்றோர்கள் கண்ணீர் வடித்தார்களாம். அதே நேரத்தில் அப்பாவின் கோபத்தை தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா, தனுஷுடன் சேர தயாராகவே இருக்கிறாராம். ஆனால் தனுஷுக்கு அந்த எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush