தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் இருக்கும் தனுஷ், நேற்று இரவு விவாகரத்து செய்யப்போவதாக வெளியிட்ட தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சோஷியல் மீடியா கணக்கில் விவாகரத்து செய்யப்போவதாக பதிவு வெளியிட்டனர். தனுஷை நான் சந்தித்தது கடவுளின் விருப்பம் என்று ஐஸ்வர்யா ஒருமுறை தெரிவித்திருந்தார். ஆனால், அத்தகைய அழகான உறவு, 18 ஆண்டுகால திருமண வாழ்வுக்குப் பின் விவாகரத்து செய்யப் போவதாக வெளியான செய்தி வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இருவரும் எப்படி சந்தித்தனர், இவர்களின் திருமணம் மற்றும் தனுஷுக்கு வேறு நடிகைகளுடன் இருந்த தொடர்பு, மற்றும் பிரிவு பற்றி பார்க்கலாம்.
முதல் சந்திப்பு
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2003-ம் ஆண்டு முதன் முதலில் சந்தித்தனர். இவர்களுடைய காதல் மற்றும் திருமணம் பலருக்கும் மிகப் பெரிய ஆச்சர்யத்தை மட்டுமல்லாமல், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தனுஷ் நடித்த
காதல் கொண்டேன் திரைப்படம் சென்னை எக்மோரில் இருக்கும் ஆல்பர்ட் தியேட்டரில் ரிலீஸ் ஆன போது தான் முதன்முறையாக
ஐஸ்வர்யா, தனுஷை சந்தித்துள்ளார். இப்படத்தில் தனுஷின் அட்டகாசமான நடிப்பு பற்றி அனைவருக்குமே தெரியும். தனுஷின் நடிப்பால் இம்ப்ரஸ் ஆன ஐஸ்வர்யா தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துகள் அனுப்பியுள்ளார். தனுஷும் பதிலுக்கு அவரை அழைத்து தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
காதல் மற்றும் திருமணம்
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கிய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா காதலில் விழுந்தனர். காதலிக்க தொடங்கிய சில மாதங்களிலேயே 2004-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணம் திரைத்துறையில் மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியது. தனுஷ் அப்போது தான்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளையவர். இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் மருமகன் தனுஷ் என்பதே பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர்.
Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா
திருமண உறவில் முதல் விரிசல்
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவு 3 திரைப்படத்தை இயக்குவதன் மூலம் நிறைவேறியது. ஆனால், 3 திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ஹாசனுடன் தனுஷ் மிகவும் நெருக்கமாக இருந்ததாக ஐஸ்வர்யா உணர்ந்தார். இப்படத்தில் மிகவும் நெருக்கமான காதல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்குமிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அதைப்பற்றி எந்த இடத்திலும் ஐஸ்வர்யா வெளிப்படையாகப் பேசவில்லை. இருவரும் அப்போதே பிரியும் முடிவில் இருந்தாலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!
திரிஷாவுடன் நெருக்கம்
2015-ஆம் ஆண்டு நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபர் மற்றும் திரைப்பட விநியோகிப்பாளரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களிலேயே அதை ரத்து செய்ததாக திரிஷா அறிவித்தார். நடிகர் தனுஷின் தலையீடு இருந்ததால் தான் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. திரிஷாவும் தனுஷும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Dhanush Aishwarya Rajinikanth: உங்கள் பாதை ஒன்றாகும் என நம்புகிறேன் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பிரிவு குறித்து ஆர்த்தி
மற்ற நடிகைகளுடன் உறவு
அதற்கு பின்பு பல்வேறு நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. விஐபி 2 திரைப்படத்தின் போது, ஐஸ்வர்யாவின் தங்கையான சௌந்தர்யாவுடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் தனுஷ். சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு தனுஷும் ஒரு பலமான காரணம் என்று கூறப்பட்டது.
Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...
அதே நேரத்தில், விஐபி 2 விற்குப் பிறகு, அமலாபாலுடன் நெருங்கிய தொடர்பில் தனுஷ், இருந்ததாக செய்திகள் வெளியாகின. ‘தனுஷுக்கு நல்ல மனைவியாக இருப்பேன்’ என்று அமலா பால் கூறியது சர்ச்சையை எழுப்பியது. அப்போதே தனுஷ் - ஐஸ்வர்யா உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், இருவரும் குடும்ப விழாக்கள், பண்டிகைகள் அனைத்திலும் குதூகலமாகக் கொண்டாடும் காட்சிகள் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வழியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டு தான் இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் சூப்பர்ஸ்டார் தாதா சாகேப் பால்கே விருது மற்றும் தனுஷ் தேசிய விருது வாங்கிய போது அதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. எல்லா சர்ச்சைகளையும் கடந்து அமைதியாக இருக்கும் தருணத்தில், திடீரென்று இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக வெளியான தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.