Home /News /entertainment /

ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு

ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா - தனுஷ்

திரையில் அவருடன் நடிக்க வேண்டும், அல்லது அவரை இயக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாளைய கனவாம்.

    மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ், தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

    இது ஒருபுறமிருக்க, ஐஸ்வர்யாவை பிரிந்ததால் தனுஷ் தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ், அவருக்கு மாப்பிள்ளையானதையே ஆச்சர்யமாக பார்த்தது தமிழ் சினிமா வட்டாரம். இதையடுத்து நடை, உடை, பாவனைகளை ரஜினியை போலவே மாற்றினார் தனுஷ்.

    இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?

    திரையில் அவருடன் நடிக்க வேண்டும், அல்லது அவரை இயக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாளைய கனவாம். தனது தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் கூட தனுஷால் நடிக்க முடியவில்லை. அதோடு பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ், அதில் வெற்றியும் கண்டார். அதனால் ரஜினியின் 170-வது படத்தை அவரே இயக்குவார் என்றும், அதுவே ரஜினி நடிக்கும் இறுதிப்படமாக இருக்கும் எனவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

    ஆனால் தற்போது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷால் மேற்கூறிய ஆசைகளை இனி நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி