Home /News /entertainment /

Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!

Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!

மகனுடன் தனுஷ்

மகனுடன் தனுஷ்

தனது மூத்த மகன் யாத்ராவுடன், தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

    நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.


    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ET Teaser: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    பின்னர் இது கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடும், அதனால் ஏற்பட்ட தற்காலிக பிரிவு தான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவர்களை மீண்டும் இணைக்க இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அப்பா ரஜினிகாந்தின் விருப்பத்தை ஏற்று மீண்டும் தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் தனுஷ் இன்னும் அதற்கு தயாராகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    Deep Sidhu: காதலர் தினம் கொண்டாடிவிட்டு வருகையில் காதலி ரீனா ராய் கண்முன் நடிகர் தீப் சித்து மறைந்த சோகம்



     




    View this post on Instagram





     

    A post shared by Dhanush (@dhanushkraja)






    இந்நிலையில் தனது மூத்த மகன் யாத்ராவுடன், தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது நானே வருவேன் படப்பிடிப்பிற்காக தனுஷ், ஊட்டியில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதே நேரத்தில் தற்போது வெளியாகியுள்ள தனுஷ் - யாத்ராவின் புகைப்படம் ஊட்டியில் எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது, பெரியப்பா செல்வராகவனின் நானே வருவேன் படப்பிடிப்பில், அப்பாவுடன் நேரத்தை செலவிடும் விதமாக யாத்ரா சென்றிருப்பதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி