Home /News /entertainment /

மிலிட்டரி ஹோட்டலில் தனுஷ்... உடனிருக்கும் இளம்பெண் யார்?

மிலிட்டரி ஹோட்டலில் தனுஷ்... உடனிருக்கும் இளம்பெண் யார்?

தனுஷ்

தனுஷ்

ஐதராபாத்தில் உள்ள மிலிட்டரி உணவகம் ஒன்றில் சாப்பிடும் படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    தனுஷ் இளம்பெண் ஒருவருடன் ஹோட்டலில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க - ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

    இதையடுத்து தனுஷ் தனது படங்களின் படப்பிடிப்பில் பிஸியானார். மியூஸிக் ஆல்பம் இயக்குவதில் கவனம் செலுத்தினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள மிலிட்டரி உணவகம் ஒன்றில் சாப்பிடும் படம் சமூக வலைதளங்களில் வெளியானது. படத்தில் தனுஷ் பக்கத்தில் அமர்ந்து இளம் பெண் ஒருவரும் உணவருந்தினார். இதைத் தொடர்ந்து யார் அந்த பெண் எனக் கேள்வி எழத் தொடங்கியது. இருப்பினும் அதற்கான பதில் கிடைக்கவில்லை.

    வலிமை முதல் காட்சி ரத்து - அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

    படங்களைப் பொறுத்தவரை தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன், வாத்தி ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Dhanush

    அடுத்த செய்தி