Home /News /entertainment /

தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பொதுவாக பிரபலமான பெண்கள் விவாகரத்து / பிரிவு அறிவிப்பை வெளியிட்டதும் சமூக வலைதளங்களில் தங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் கணவரின் பெயரை நீக்கி விடுவார்கள்.

    நடிகர் தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு தனது பெயரை மாற்றியுள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர் இது கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடும், அதனால் ஏற்பட்ட தற்காலிக பிரிவு தான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவர்களை மீண்டும் இணைக்க இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

    Deep Sidhu: காதலர் தினம் கொண்டாடிவிட்டு வருகையில் காதலி ரீனா ராய் கண்முன் நடிகர் தீப் சித்து மறைந்த சோகம்

    Aishwarya Rajinikanth changed her name after the separation with Dhanush, Dhanush and Aishwarya Rajinikanth split, dhanush, dhanush wife, dhanush son age, dhanush father, dhanush age, dhanush family, dhanush mother, dhanush sisters, தனுஷ், தனுஷ் மனைவி, தனுஷ் மகன் வயது, தனுஷ் தந்தை, தனுஷ் வயது, தனுஷ் குடும்பம், தனுஷ் தாய், தனுஷ் சகோதரிகள், aishwarya r dhanush, aishwaryaa dhanush, aishwarya rajinikanth, aishwarya r dhanush instagram, aishwarya r dhanush net worth, aishwarya r dhanush father, aishwarya dhanush height, dhanush age, aishwarya dhanush age, dhanush wife, dhanush aishwarya dhanush divorce, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, rajinikanth dhanush divorce, aishwarya dhanush, rajnikanth, dhanush and aishwarya, danush tamil actor, dhanush twitter, danush, dhanush aishwarya, aishwarya r. dhanush, soundarya rajinikanth

    இந்நிலையில் தனுஷ் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளிலும், ஐஸ்வர்யா தான் இயக்கவிருக்கும் இசை ஆல்ப பணிகளிலும் பிஸியானார்கள். பொதுவாக பிரபலமான பெண்கள் விவாகரத்து / பிரிவு அறிவிப்பை வெளியிட்டதும் சமூக வலைதளங்களில் தங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் கணவரின் பெயரை நீக்கி விடுவார்கள். சில நேரங்களில் இந்த மாதிரியான பெயர் நீக்க விஷயங்கள் தான் விவாகரத்து விவகாரம் குறித்த சந்தேகத்தையே கிளப்பும். சமீபத்தில் பிரிந்த மற்றொரு நட்சத்திர ஜோடியான சமந்தா - நாக சைத்தன்யா விஷயத்திலும் இது தான் நடந்தது. ஆனால் ஐஸ்வர்யா இன்னும் தனது சமூக வலைதளங்களில் இருந்து தனுஷ் பெயரை நீக்கவில்லை, ஐஸ்வர்யா தனுஷ் என்றே இன்னும் வைத்திருக்கிறார்.

    டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்திய இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்

    இதற்கிடையே அவர் இயக்கும் இசை ஆல்பத்தின் டீசர் வெளியானது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என, தனது அப்பா பெயரை தன் பெயருக்குப் பின்னால் சேர்த்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி