ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

கணவரை பிரிவதாக அறிவித்து 1 மாதம் கழிந்த நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து தனுஷ் பெயரை நீக்காமல் இருக்கிறார் ஐஸ்வர்யா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தான் காதலிப்பது குறித்து வெளிப்படையாக மனம் விட்டு பேசியுள்ளார் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற ஏமி ஜாக்சன் சர்ச்சை நடிகருடன் புதிய காதல்?

    இது பொதுவாக கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடு தான் எனவும், விரைவில் அவர்கள் ஒன்றிணைவார்கள் எனவும் சொல்லப்பட்டது. கணவரை பிரிவதாக அறிவித்து 1 மாதம் கழிந்த நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து தனுஷ் பெயரை நீக்காமல் இருக்கிறார் ஐஸ்வர்யா.

    Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!

    இது ஒருபுறமிருக்க, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் ஐஸ்வர்யா, காதல் குறித்த தனது பார்வையை பகிர்ந்துள்ளார். அதில், ’காதல் ஒரு பொதுவான உணர்வு, ஒரு ஆளுக்கும் அவரின் தனிப்பட்ட விஷயத்துக்கும் தொடர்பில்லை. நான் என் தந்தையை நேசிக்கிறேன், நான் என் அம்மாவை நேசிக்கிறேன், என் குழந்தைகளை நேசிக்கிறேன். அன்பை கட்டுப்படுத்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆம், நான் காதலிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Rajinikanth