Home /News /entertainment /

தனுஷின் ட்வீட்டை லைக் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! மீண்டும் இணைய க்ரீன் சிக்னல்?

தனுஷின் ட்வீட்டை லைக் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! மீண்டும் இணைய க்ரீன் சிக்னல்?

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷின் ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

    தனுஷின் ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்தது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.

    இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் கணவன் - மனைவிக்குள் வந்திருக்கும் சாதாரண சண்டை தான் வந்துள்ளது எனவும், வேறுபாடுகளை களைந்து அவர்கள் விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் பிஸியானார். ஐஸ்வர்யா மியூசிக் வீடியோ இயக்குவதில் தனது கவனத்தை செலுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

    வடிவேலுவுக்கு மாபெரும் வரவேற்பு அளித்த மாமன்னன் படக்குழு!

    இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த மார்ச் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

    தோனி முதல் தனுஷ் வரை பிரபலங்கள் விரும்பி அணியும் டி-ஷர்ட் - விலையைக் கேட்டா தலை சுத்திடும்!

    இதனையடுத்து மாறன் ரிலீஸ் செய்தியை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் தனுஷ். அந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரஜினியின் பேச்சு வார்த்தையை அடுத்து, தனுஷுடன் இணைய ஐஸ்வர்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் தனுஷ் தான் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றும் முன்பே கூறப்பட்டது.

    Aishwarya Rajinikanth liked Dhanush tweet on Twitter, Dhanush and Aishwarya Rajinikanth, dhanush, dhanush wife, dhanush son age, dhanush father, dhanush age, dhanush family, dhanush mother, dhanush sisters, தனுஷ், தனுஷ் மனைவி, தனுஷ் மகன் வயது, தனுஷ் தந்தை, தனுஷ் வயது, தனுஷ் குடும்பம், தனுஷ் தாய், தனுஷ் சகோதரிகள், aishwarya r dhanush, aishwaryaa dhanush, aishwarya rajinikanth, aishwarya r dhanush instagram, aishwarya r dhanush net worth, aishwarya r dhanush father, aishwarya dhanush height, dhanush age, aishwarya dhanush age, dhanush wife, dhanush aishwarya dhanush divorce, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, rajinikanth dhanush divorce, aishwarya dhanush, rajnikanth, dhanush and aishwarya, danush tamil actor, dhanush twitter, danush, dhanush aishwarya, aishwarya r. dhanush, soundarya rajinikanth
    ஐஸ்வர்யா லைக் செய்த தனுஷ் ட்வீட்


    இந்நிலையில் தனுஷின் ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்தது, அவர்கள் இணைவதற்கான நம்பிக்கையை துளிர்க்கச் செய்திருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush

    அடுத்த செய்தி