பிரிவை அறிவித்த பிறகு தனுஷும் ஐஸ்வர்யாவும் நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் எதுவும் பேசினார்களா, என்ன நடந்தது என்பதை அறிந்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இனி செழியனாக நடிப்பது இவரா?
இது பொதுவாக கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடு தான் எனவும், விரைவில் அவர்கள் ஒன்றிணைவார்கள் எனவும் சொல்லப்பட்டது. இருப்பினும் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து மேற்படி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மனைவியுடன் விபத்தில் சிக்கிய சன் டிவி வானத்தைப் போல சீரியல் பிரபலம்
இந்நிலையில் பிரிவை அறிவித்த பிறகு தனுஷும் ஐஸ்வர்யாவும் பார்ட்டி ஒன்றில் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளாமல் விலகிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.