Home /News /entertainment /

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

சிம்பு - ஐஸ்வர்யா

சிம்பு - ஐஸ்வர்யா

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா, ஒரு காலத்தில் அவரின் போட்டியாளராகக் கருதப்பட்ட சிம்புவுடன் திரைப்படத்தில் இணைவதை ஆச்சர்யமாக பார்க்கிறது கோலிவுட் வட்டாரம்.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் முசாபிர் எனும் மியூசிக் வீடியோவை இயக்கியிருக்கும் ஐஸ்வர்யா அடுத்ததாக படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறாராம். அதில்தான் சிம்பு நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

    உடல் எடையைக் குறைத்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறாராம்.

    இதையும் படிங்க - பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?

    சிம்புவும், ஐஸ்வர்யாவும் காதலித்ததாகவும் பின்னர் சில காரணங்களால் அந்த காதல் முறிந்து போனதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு கதையுண்டு. இது உண்மையா, பொய்யா என்பதைத் தாண்டி தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா, ஒரு காலத்தில் அவரின் போட்டியாளராகக் கருதப்பட்ட சிம்புவுடன் இணைவதை ஆச்சர்யமாக பார்க்கிறது கோலிவுட் வட்டாரம்.

    Also Read - தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

    தவிர, தனது முன்னாள் காதலிகளான நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடன் சிம்பு இணைந்து வேலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Simbu

    அடுத்த செய்தி