மனைவியை பிரிவதாக தனுஷ் அறிவித்த பிறகு அவரிடம் நிறைய மாற்றங்கள். முக்கியமாக தனது மகன்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்.
மணமுறிவு அறிவிப்புக்குப் பின் மகன்களுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்களும் அதிகம் வெளிவருகின்றன. நிகழ்வுகளில் தனுஷை அவரது மகன்களுடன் பார்க்க முடிகிறது.சினிமாவைப் பொறுத்தவரை தனுஷின் கிராஃப் சற்று இறங்கியுள்ளது. அவர் நடித்தப் படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகின்றன. படம் சரியில்லை, அதனால் திரையரங்கில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்ற விமர்சனத்தை உண்மையாக்கும் வகையில்தான் படங்களும் இருக்கின்றன.
இதையும் படிங்க.. விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரத்தைத் தொடர்ந்து, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்த அத்ரங்கி ரே இந்திப் படமும் ஓடிடியில்தான் வெளியானது. சமீபத்தில் மாறன் நேரடியாக ஓடிடி வெளியீட்டை கண்டது. அடுத்து வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம் தி க்ரே மேனும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
எப்போதுதான் தனுஷை அகன்ற திரையில் பார்ப்பது என்று காத்திருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, அவரது திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு நடந்த நல்ல விஷயம்.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!
வெங்கி அட்லூரியின் வாத்தி படத்தை முடித்திருக்கும் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் போஸ்ட்
புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன் செல்வராகவனின் நானே வருவேன் படவேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன. வெளியான படங்கள் சுமாராக இருப்பது ஒருபுறம் என்றால், விவாகரத்து அறிவிப்பு ஏற்படுத்திய பெயர் இழப்பு இன்னொருபக்கம். இதனை சரி செய்யத்தான் இப்போதெல்லாம் மகன்களுடன் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள். நல்ல மாற்றம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.