கடந்த திங்கள் இரவு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களுடைய சமூக வலைதள கணக்குகளில் ஒரே நேரத்தில் பதிவு செய்திருந்தனர். இது கிட்டத்தட்ட அனைவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு என்ன காரணமாக இருக்கும் என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. அதில், இருவரின் தனிப்பட்ட சொத்து பற்றிய விவரங்களும் அடங்கும்.
அதுமட்டுமின்றி திடீரென்று பிரபலங்கள் அல்லது நட்சத்திர தம்பதிகள் அல்லது கோடீஸ்வர தம்பதிகள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற அறிவிப்புக்குப் பின் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. கருத்து வேறுபாடு, புரிதல் இல்லை என்பதெல்லாம் திருமணமான சில ஆண்டுகளில் விவாகரத்து செய்யக்கூடிய தம்பதிகளுக்கானவை. தனுஷ் மற்றும்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில், இவர்கள் விவாகரத்து செய்வதற்கான காரணமாக வரி அல்லது கடன் பிரச்சனைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உதராணமாக, பிரபல சர்வதேச ஜோடியான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதி சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்தனர். இந்த செய்தி உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் விவாகரத்து செய்ததற்கான காரணம் வரியைக் குறைப்பதற்கு மட்டும் தான் என்று கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், தனுஷின் சொத்து எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தனுஷ் நடித்துத் தயாரிக்கும் திரைப்படமான மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இந்தப் படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது. OTT வெளியீடு கணிசமான லாபத்தைக் கொடுக்கும். அதே போல, நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாறன் திரைப்படத்தை அடுத்து ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?
இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் தற்போது
தனுஷ் மேலும் ஒரு இருமொழிப் படம் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தி மற்றும் தமிழில் வெளியான அட்ரங்கீ திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுள்ளது. இனி அடுத்து நடிக்க இருக்கும் படங்களின் பட்டியளும் வெளியாகியது. வாத்தி, D43, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மற்றும் நானே வருவேன் என்று அடுத்தடுத்த மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது தனுஷின் சொத்து மதிப்பை கணிசமாக உயர்த்தி உள்ளது என்றே கூறலாம்.
Dhanush Aishwarya Rajinikanth: தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் - ஆச்சர்யப்படாத நண்பர்கள்!
தனுஷ் போயஸ் கார்டனில் ஒரு மினி பங்களாவை கட்டி வருகிறார் என்ற செய்தியும் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதற்கான பூமி பூஜை கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்டது. இந்த பங்களாவின் மதிப்பு 150 கோடி என்று தகவல். இதைத் தவிர்த்து, நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு 150 கோடி முதல் 200 கோடி வரை இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.