Home /News /entertainment /

Dhanush Aishwarya Rajinikanth: உங்கள் பாதை ஒன்றாகும் என நம்புகிறேன் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பிரிவு குறித்து ஆர்த்தி கணேஷ்

Dhanush Aishwarya Rajinikanth: உங்கள் பாதை ஒன்றாகும் என நம்புகிறேன் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பிரிவு குறித்து ஆர்த்தி கணேஷ்

ஆர்த்தி - ஐஸ்வர்யா - தனுஷ்

ஆர்த்தி - ஐஸ்வர்யா - தனுஷ்

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக நேற்றிரவு அறிவித்தனர்.

    18 வருட அன்பான வாழ்க்கை வீணாகக் கூடாது, இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன், என தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை ஆர்த்தி கணேஷ்கர்.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக நேற்றிரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.

    Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

    அந்த அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

    Dhanush Aishwarya: அக்கா ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்த செளந்தர்யா ரஜினிகாந்த்!



    Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

    இதனை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் தனுஷ். இதனை மேற்கோள்காட்டி, “18 வருட அன்பான வாழ்க்கை வீணாக கூடாது, எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல. இந்த சின்ன பிரிவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டு கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை ஆர்த்தி கணேஷ்கர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush, Tamil Cinema

    அடுத்த செய்தி