• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Dhanush: ’தனுஷ் 44’ இனி திருச்சிற்றம்பலம்!

Dhanush: ’தனுஷ் 44’ இனி திருச்சிற்றம்பலம்!

தனுஷ்

தனுஷ்

படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

  • Share this:
    தனுஷ் நடிக்கும் 44-வது படத்திற்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    தனுஷ் தற்போது தனது 43-வது படமான மாறனில் நடித்து வருகிறார். அத்துடன், சேகர் கம்முலா, செல்வராகவன், ராட்சசன் ரவிக்குமார், மாரி செல்வராஜ் உள்பட பலரது இயக்கத்தில் படங்கள் நடிக்கவிருக்கிறார்.

    இதற்கிடையே தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது. யாராடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை தொடர்ந்து மித்ரன் ஜவஹரும் தனுஷும் இணையும் 4-வது படம் இது.



    தனுஷின் இருவேறு காலட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை அனிருத்.

    இந்நிலையில் இந்தப் படத்துக்கு ‘திருச்சிற்றம்பலம்’ எனப் பெயரிடப்படுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: