தனுஷ் ரசிகர்களுக்கு 6 மணிக்கு ஸ்பெஷல் ட்ரீட்

D39 படத்திற்கு பிறகு ராட்சசன் புகழ் ராம்குமாருடன் இணையவுள்ளார் தனுஷ்

news18
Updated: July 28, 2019, 2:37 PM IST
தனுஷ் ரசிகர்களுக்கு 6 மணிக்கு ஸ்பெஷல் ட்ரீட்
தனுஷ்
news18
Updated: July 28, 2019, 2:37 PM IST
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 39-வது படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் படத்திற்கு தற்காலிகமாக D39 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.




தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் இன்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.  அவருக்கு பிறந்தநாள் பரிசாக D39 படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். இதையடுத்து #D39FirstLook என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



இந்தப்படத்திற்கு பிறகு ராட்சசன் புகழ் ராம்குமாருடன் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO WATCH

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...