தனுஷின் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் உள்பட 2 படங்கள் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.
கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜெகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஜெகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்பராஜ், மாறன் படத்தை கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்கியதால் இந்த படங்கள் மெகா ஹிட்டடித்து, தனுஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சேர்க்கும் என ரசிகர்கள் நம்பினர்.
அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக, தனுஷின் மார்க்கெட் சற்று சரிந்ததுதான் எதார்த்தமாக உள்ளது. இதனால், தனுஷின் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இதையும் படிங்க - அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்ரமின் முதல் பாடல்… இதுவரையில் கமல் சிக்கிய சர்ச்சைகள்… சிறப்பு தொகுப்பு
இந்த படம் ஜூலை மாதம் 15-ம்தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி க்ரே மேன் படம் வெள்ளித் திரையில் வெளியாகும் என எதிர்பார்த்த தனுஷின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதேபோன்று தனுஷின் மற்றொரு படமான திருச்சிற்றம்பலம் நிறைவு பெற்று, வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்தப் படம் ஜூலை 1ம் தேதி வெளியாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க - இசையில் மாய நதியை ஓட செய்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்… சூப்பர் ஹிட் பாடல்கள் தொகுப்பு…
திருச்சிற்றம்பலம் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்தள்ளார். இதைத் தொடர்ந்து ராட்சசன் இயக்குனர் ராம்குமார், மாரி செல்வராஜ், சாணி காயிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.