முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிமாறனின் 'விடுதலை' ப்ரமோ : 'உன்கிட்ட இருந்து வாங்கணுமில்லையா...'' தனுஷை கலாய்த்த இளையராஜா

வெற்றிமாறனின் 'விடுதலை' ப்ரமோ : 'உன்கிட்ட இருந்து வாங்கணுமில்லையா...'' தனுஷை கலாய்த்த இளையராஜா

இளையராஜா - தனுஷ்

இளையராஜா - தனுஷ்

இளையராஜா இசையில் தனுஷ் முதன்முதலாக பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'அசுரன்' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் சூரி ஹீரோவாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

குறைவான பட்ஜெட்டில் ஒரே பாகமாக துவங்கப்பட்ட இப்படம் கதையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக இரண்டு பாகங்கள் கொண்ட படமாக மாறியுள்ளது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டப்பிங் பணியை விஜய் சேதுபதி சமீபத்தில் துவங்கினார். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான உன்னோடு நடந்த என்ற பாடல் வருகிற 8 ஆம் தேதி வெளியாகிறது.

சுகா எழுதியுள்ள இந்தப் பாடலை தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடியுள்ளனர். இளையராஜா இசையில் தனுஷ் முதன்முதலாக பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாடலின் இசையை தனுஷிற்கு இளையராஜா கற்றுக்கொடுக்கிறார். உடன் இயக்குநர் வெற்றிமாறன் இருக்கிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Bhavani Sre (@bhavanisre)தனுஷ் மற்றும் வெற்றிமாறனிடம் உங்கள் முகம் தெரியனும், அதனால் மாஸ்க்கை கழட்டுங்கள் என்கிறார். அவரிடம் தனுஷ், தனக்கு சளி பிரச்னை இருக்கிறது எனவும் பிறருக்கும் பரவும் என்பதால் மாஸ்க் அணிந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதற்கு இளையராஜா, உங்களிடமிருந்து ஏதாவது வாங்கனுமில்லையா என நக்கலாக பதிலளிக்க வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் பலமாக சிரிக்கின்றனர்.

First published:

Tags: Actor Dhanush, Director vetrimaran, Ilaiyaraja