லிங்குசாமியுடன் முதல்முறையாக இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!

லிங்குசாமியுடன் முதல்முறையாக இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!

லிங்குசாமி - தேவிஸ்ரீ பிரசாத்

ஆனந்தம் படத்தில் லிங்குசாமி இயக்குநராக அறிமுகமானபோது, திறமையான இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பதாக விமர்சகர்கள் கணித்தனர்.

 • Share this:
  ஆனந்தம் படத்தில் லிங்குசாமி இயக்குநராக அறிமுகமானபோது, திறமையான இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பதாக விமர்சகர்கள் கணித்தனர்.

  ரன், சண்டக்கோழி, பையா படங்களில் அவர் அதனை உறுதி செய்தார். ஆனால், அஞ்சான் என்ற ஒரே படம் அவரது இமேஜை மாற்றியது. அதிலிருந்து வெளியேற லிங்குசாமி எடுத்த முயற்சிதான் சண்டக்கோழி 2. ஆனால், படம் தோல்வியடைந்து, லிங்குசாமியை அதே இருளுக்குள் தள்ளியது.

  சண்டக்கோழி 2-க்கு முன்பு அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. சண்டக்கோழி 2 படத்தை முடித்த பின்பே வேறு படத்துக்கு லிங்குசாமி செல்ல வேண்டும் என்று விஷால் பிரச்சனை செய்ததால், அல்லு அர்ஜுன் படம் தள்ளிப் போனது. சண்டக்கோழி 2 படத்தை முடித்து வந்தால், அல்லு அர்ஜுன் எட்ட முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டார். கடைசியில் அவருக்கு பதில் லிங்குசாமிக்கு கிடைத்தவர் ராம். தெலுங்கில் மோசமில்லாத ஹிட்டுகளை தந்தவர். அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் படம் இயக்குகிறார் லிங்குசாமி. நாயகி கீர்த்தி ஷெட்டி.

  ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமாரில் தொடங்கி வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என பலருடன் பணிபுரிந்திருக்கும் லிங்குசாமி தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைவது இதுவே முதல்முறை. இந்த புதிய காம்போ இணைய முக்கிய காரணம் படத்தின் நாயகன் ராம். இவர் நடித்த ஆறு படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதில் பல ஹிட் ஆல்பங்கள் என்பதுதான் இதற்கு காரணம்.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: