Devayani: மீண்டும் 'கோலங்கள்’ அபி-பாஸ்கர் காம்போ: புதிய சீரியலில் தேவயானி!

Devayani: மீண்டும் 'கோலங்கள்’ அபி-பாஸ்கர் காம்போ: புதிய சீரியலில் தேவயானி!

தேவயானி

சினிமா மட்டுமில்லாமல் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் தேவயானி.

  • Share this:
    நடிகை தேவயானி நடிக்கும் புதிய சீரியல் தொடர்பான தகவல் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

    தனது குடும்பப் பாங்கான நடிப்பால் 90’ஸ் கிட்ஸ் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தவர் நடிகை தேவயானி. அஜித்துடன் அவர் நடித்த ‘காதல் கோட்டை’ திரைப்படம் தேவயானியை ரசிகர்களுடன் நெருக்கமாக்கியது. பார்க்காத காதலை உணர்வுப் பூர்வமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். விஜய்யுடன் ’நினைத்தேன் வந்தாய்’, ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்.

    Vimal: சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்!

    சினிமா மட்டுமில்லாமல் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் தேவயானி. அந்த சீரியலில் நடிகை தேவயானியுடன் இணைந்து தீபா வெங்கட், அபிஷேக், ஈஸ்வரமூர்த்தி, திரு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலங்கள் சீரியல் 6 வருடங்களுக்கும் மேல் ஒளிபரப்பாகி பெரும் வெற்றி பெற்றது.

    Election 2021: பிரபல நகைச்சுவை நடிகர்-இயக்குநர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialsexpress)






    இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தேவயானி. இதில் சிறப்பு என்னவென்றால் 12 வருடம் கழித்து அபி - பாஸ்கர் ஜோடி மீண்டும் இணைகிறது. ஆம் கோலங்கள் சீரியலில் பாஸ்கராக தேவயானியுடன் நடித்த அபிஷேக், இந்த புதிய சீரியலிலும் நடிக்கிறார்.

    Vijay TV Raaja Paarvai: திருமணம் முடிந்த கையோடு மீண்டும் விஜய் டிவி-யில் பிரபல நடிகை!

    ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் "புதுப்புது அர்த்தங்கள்" என்ற சீரியலில் தான் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் இதன் பூஜை நடைபெற்றுள்ளது. அந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: