ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'லேடி நர்ஸ்' வேண்டாம் என்றாரா முத்துராமலிங்க தேவர்? திரைப்பட விழாவில் வாக்குவாதம்!

'லேடி நர்ஸ்' வேண்டாம் என்றாரா முத்துராமலிங்க தேவர்? திரைப்பட விழாவில் வாக்குவாதம்!

தேவர் பட சர்ச்சை

தேவர் பட சர்ச்சை

இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர் கதாப்பாத்திரம் 6 காட்சிகளில் வருகிறது. அதில் நானே விக் அணிந்து நடித்திருக்கிறேன்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ‘தேசிய தலைவர்’ திரைப்பட விழா மேடையில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் கண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

  தேசிய தலைவர் என்ற பெயரில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் இதன் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் கண்ணன், “இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர் கதாப்பாத்திரம் 6 காட்சிகளில் வருகிறது. அதில் நானே விக் அணிந்து நடித்திருக்கிறேன். தேவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, லேடீஸ் நர்ஸ் வேண்டாம், ஆண் நர்ஸ் தான் வேண்டும் என்றார். அதை என் தந்தை தான் ஏற்பாடு செய்தார். தேவருடன் நெருங்கி பழகியவர்களில் என் தந்தையும் ஒருவர்” என தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: கல்யாணம் என்றால் என்ன? வாய்விட்டு சிரிக்க வைக்கும் பள்ளி மாணவரின் பதில் வைரல்

  பின்னர் மற்றொருவர் பேசும்போது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுத்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Muthuramalinga Thevar, SSR