Vadivelu: டிடெக்டிவ் நேசமணியாக வடிவேலு - லுக்கை புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

வடிவேலு

வடிவேலு ஒரு டிஜிட்டல் தளத்திற்கான டாக் ஷோவை தொகுத்து வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால்

  • Share this:
    சி.வி.குமார் தயாரிப்பில் நடிகர் வடிவேலு ‘டிடெக்டிவ் நேசமணி’ என்ற படத்தில் நடிப்பதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு தற்போது முற்றுபுள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

    பெரிய திரையில் வைகைப்புயல் வடிவேலுவை காண ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கிறார்கள். அவர் படங்களில் நடிக்காவிட்டாலும், மீம்ஸ்கள் மூலம் தினம் லட்சக்கணக்கானவர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தை சி.வி.குமார் தயாரிப்பதாக, சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்று வலம் வந்தது. தற்போது இதனை சி.வி.குமார் மறுத்துள்ளார்.



    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சி.வி.குமார், ”Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா” எனக் குறிப்பிட்டுள்ளார். டிடெக்டிவ் நேசமணி எனக் குறிப்பிடப்பட்டு, உருவாக்கப்பட்டிருந்த வடிவேலுவின் தோற்றம், அவருக்கு பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    இதற்கிடையில், வடிவேலு ஒரு டிஜிட்டல் தளத்திற்கான டாக் ஷோவை தொகுத்து வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: