ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகின் பல நாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தது.நட்சத்திர நிலவில் இருக்கும் பண்டோரா என்ற இடத்தை, தன்னுடைய அதீத கற்பனையால் காட்சியாக்கியிருந்தார் ஜேம்ஸ் கேம்ரூன். அதுவும் 3டியில் வெளியான அவதார் ஒரு இருட்டு அரங்கில் இருந்து மாயாஜால உலகிற்கு சென்ற உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்தது. இதனால் டிசம்பர் 16 வெளியான அவதார் 2 படத்திற்கு தமிழகத்திலும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்திற்காக தமிழ் தயாரிப்பாளர்கள் யாரும் தங்கள் படத்தை வெளியிட முன்வரவில்லை.
தமிழகத்தில் அவதார்-2 படத்தை சுமார் 450 திரையரங்குகளில் திரையிட அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டனர். அத்துடன் சில முக்கிய திரையரங்குகளில் அவதார் படத்திற்கு என சில அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறுவப்பட்டன.
ஆனால் இந்தப் படத்தை வெளியிடும் UTV நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்களிடம் அவதார்-2 படத்திற்கு 70% ஷேர் கேட்டதாகவும், அதனால் அந்தப் படம் வெளியாவதில் சிக்கல் எனவும் நியூஸ் 18 தமிழ்நாடு கடந்த 1-ம் தேதி கூறியிருந்தது. அதேபோல் நேற்று வரை விநியோகஸ்தருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மத்தியில் தொடர் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இருந்தாலும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் விநியோகஸ்தர் கேட்ட ஷேர் தொகைக்கு உடன்பட்ட சுமார் 200 திரையரங்குகள் மட்டுமே அவதார்-2 ஒப்பந்தம் செய்தன. அதில் மட்டுமே 15-ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டது.
ஷேர் தொகை விவகாரத்தில் தொடர் பேச்சு வார்த்தை நடைபெற்றதால் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட முன்னணி திரையரங்குகளில் அவதார்-2 படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற குழப்பம் இறுதி நேரம் வரை நிலவியது. நேரம் ஆக ஆக இன்னும் சில திரையரங்குகள் விநியோகஸ்தருடன் சமரசம் செய்துகொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டன. மற்ற திரையரங்குகளுடன் தொடர் பேச்சு வார்த்தை இறுதி நேரம் வரை நடைபெற்றது. இறுதியில் சுமார் 400 திரையரங்குகள் அவதார்-2 படத்தை வெளியிட்டன.
தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் திரையிடப்பட்டாலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில முன்னணி திரையரங்குகள் அவதார்-2 படத்தை திரையிடவில்லை. அது குறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.
ஆங்கில படங்கள் எப்போதும் 55% தொகை விநியோகஸ்தருக்கும், 45% திரையரங்கு உரிமையாளருக்கும் என்ற அடிப்படையில் திரையிடப்படும். ஆனால் இந்த படத்திற்கு 70% தொகை தங்களுக்கு வேண்டும் என விநியோகஸ்தர்கள் கேட்டிருக்கின்றனர்.
அதேசமயம் கர்நாடகா, டெல்லி போன்ற பிற மாநிலங்களில் 55% மட்டுமே விநியோகஸ்தருக்கு கொடுக்கப்படுகிறது. இதை முன்வைத்தே தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் திரையிட மறுத்தனர். இதன் காரணமாக தமிழத்தில் அவதார்-2 படத்திற்கு திட்டமிட்ட திரையரங்கில் 20 முதல் 25 சதவீதம் வரை குறைவகவே திரையிடப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: James Cameron, Theatre