ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.... வாரிசு vs துணிவு - ஓடிடியிலும் போட்டியா ?

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.... வாரிசு vs துணிவு - ஓடிடியிலும் போட்டியா ?

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

வாரிசா - துணிவா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக மோதிக்கொள்ளும் நிலையில் பிரபலங்கள் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரண்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருப்பினும் ரசிகர்களின் ஆதரவால் இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் கிடைத்துவருவதாக கூறப்படுகிறது.

வாரிசு படம் உலக அளவில் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கடுமையாக விசாரித்தார். மற்றொரு பக்கம் துணிவு படமும் உலக அளவில் ரூ.200 கோடி அளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியானது போல ஓடிடியிலும் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில் இரண்டு படங்களும் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி அந்தந்த ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

வாரிசா - துணிவா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக மோதிக்கொள்ளும் நிலையில் பிரபலங்கள் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், “உடனடியாக இதை நிறுத்துங்கள். படங்களை படமாக பாருங்கள். உங்களுடைய ஹீரோக்களை திரையில் கொண்டாடுங்கள்” என காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: Thunivu, Varisu