Home /News /entertainment /

அடுத்தப் படம் ரஜினியுடனா? தேசிங்கு பெரியசாமி சொன்ன பதில்...

அடுத்தப் படம் ரஜினியுடனா? தேசிங்கு பெரியசாமி சொன்ன பதில்...

தேசிங்கு பெரியசாமி - ரஜினிகாந்த்

தேசிங்கு பெரியசாமி - ரஜினிகாந்த்

தேசிங்கு பெரியசாமி தனது இரண்டாவது படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. அதைப் பற்றி அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனது அடுத்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை ஹீரோவாக வைத்து இயக்கவில்லை என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

    வெற்றிகரமான திரில்லர் திரைப்படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா நடித்த இந்தப் படம் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. சுவாரஸ்யம் மிகுந்த இப்படம் இயக்குனருக்கு பாராட்டுக்களைப் பெற்று தந்தது.

    அதோடு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை சிறப்பாக இயக்கியதற்காக நடிகர் ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமியை வெகுவாக பாராட்டினார். அப்போது இயக்குனருடன் ஒரு திரில்லர் படத்தில் பணியாற்றவும் விருப்பம் தெரிவித்தார் ரஜினி. அதிலிருந்து, தேசிங்கு பெரியசாமி, ரஜினிகாந்தை இயக்குவது குறித்த செய்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமீபத்திய ஊடக உரையாடலில், தனது அடுத்த படம் ரஜினிகாந்துடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக இருப்பதால், அவரை இயக்கும் ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். தேசிங்கு பெரியசாமி தனது இரண்டாவது படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. அதைப் பற்றி அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    கணவர் வித்யாசாகர் இழப்பிலிருந்து மீண்ட மீனா!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில், தேசிங்கு பெரியசாமி தனது காதலியும் நடிகையுமான நிரஞ்சனி அகத்தியனை கடந்தாண்டு மணந்தார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி