மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்... விஜய் ரசிகர்களை பாராட்டிய போலீஸ்

திருநெல்வேலி நகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் விஜய் ரசிகர்களை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்... விஜய் ரசிகர்களை பாராட்டிய போலீஸ்
விஜய் ரசிகர்களுடன் அர்ஜுன் சரவணன்
  • Share this:
நடிகர் விஜய்க்கு ஜூன் மாதம் 22-ம் தேதி பிறந்தநாள். இந்த மாதத்தில் எப்போதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள் விஜய் ரசிகர்கள்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டார் விஜய். ஆனாலும் கொரோனா காலத்தில் ஆங்காங்கே விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சில ரசிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தேனி நகர காவல் துறையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறை அலுவலகத்துக்கு விஜய் ரசிகர்கள் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை வழங்கினர்.


அதேபோல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம் -சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனியின் குடும்பத்துக்கு ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் இணைந்து ரூ.1 லட்சம் நிதியுதவி செய்தனர்.

தற்போது நெல்லை மாநகர காவல்துறையினர் பயன்பாட்டிற்காக தடுப்புகளை வழங்கி உதவி செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் திருநெல்வேலி நகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “விஜய் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22) நெல்லை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக பேரிகார்டுகளை வழங்கிய நெல்லை மாவட்ட தலைமை இணையதள விஜய் மக்கள் இயக்கத்திற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் சமூக பார்வை தொடரட்டும் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்” என்று கூறியுள்ளார்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading