• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • DUNE - வெனிஸ் திரைப்படவிழாவில் கைத்தட்டல் வாங்கிய திரைப்படம்!

DUNE - வெனிஸ் திரைப்படவிழாவில் கைத்தட்டல் வாங்கிய திரைப்படம்!

ட்யூன்

ட்யூன்

படம் முடிந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று பல நிமிடங்கள் கைத்தட்டி படத்தையும், டெனிஸையும் கௌரவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெனிஸ் வில்லெனியுவ் பிரெஞ்ச் - கனடிய இயக்குனர். சமகால இயக்குனர்களில் முக்கியமானவர். ஸ்டேன்லி க்யூபிரிக் போல ஒருசிலரே அனைத்துவகை ஜானர்களிலும் படங்களை எடுக்கும் திறமை கொண்டவர்கள். அவர் அளவுக்கு இல்லை என்றாலும் டெனிஸ் தான் எடுக்கும் அனைத்து ஜானர்களிலும் முத்திரைப் பதித்தவர். 

அவரது பிரிசனர்ஸ் திரைப்படம் (இதுதான் அவரது முதல் ஆங்கில திரைப்படம்) ஒரு க்ரைம் த்ரில்லர். அட்டகாசமான படைப்பு. அடுத்து அவர் இயக்கிய எனிமி ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர். அதையடுத்து சிக்காரியோ. ட்ரக் கார்டலை பற்றிய சிறந்த படங்களுள் ஒன்று. அரைவல் ஒரு சயின்ஸ் பிக்ஷன். இப்போது இயக்கியிருக்கும் ட்யூன் படமும் ஒரு சயின்ஸ் பிக்ஷன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் கவனிக்க வேண்டியது, அவரது படங்கள் பெரும்பாலும் நாவல், நாடகம், சிறுகதைகளை தழுவி எடுக்கப்பட்டவை. ட்யூன் திரைப்படம் இதே பெயரில் 1965 இல் ப்ராங்க் ஹெர்பெட் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. தற்போது நடந்து வரும் வெனிஸ் திரைப்பட விழாவில் நேற்று முதன் முதலில் திரையிடப்பட்டது

Also read... அண்ணன் செல்வராகவனுக்கு இந்த வருடமே கால்ஷீட் தரும் தனுஷ்!

படம் முடிந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று பல நிமிடங்கள் கைத்தட்டி படத்தையும், டெனிஸையும் கௌரவித்துள்ளனர். அபூர்வமாகவே இப்படியான நிகழ்வுகள் திரைப்பட விழாக்களில் நடைபெறும். படம் பிடித்திருந்தால், எழுந்து நின்று கைத்தட்டுவார்கள். சில நொடிகளில் அரங்கு காலியாகிவிடும். தொடர்ச்சியாக கைத்தட்டல் பெறுவது அரிது. அதற்கு படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்க வேண்டும். ட்யூன் அப்படி இருக்கிறது என வெனிஸில் அதற்கு கிடைத்திருக்கும் கௌரவம் சொல்கிறது

படம் இந்தியா வந்தால் மறக்காமல் திரையரங்கில் பாருங்கள். புதிய அனுபவம் நிச்சயம் சித்திக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: