Home /News /entertainment /

சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு அதிகரிக்கும் போட்டி..

சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு அதிகரிக்கும் போட்டி..

சூர்யா

சூர்யா

Surya Etharkum Thuninthavan Movie : 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகிறது.

ஜெய் பீம் படத்துக்குப் பிறகு இந்திய அளவில் எதிர்பார்க்கப்படுகிற நடிகராகியிருக்கிறார் சூர்யா. ஜெய் பீம் படத்தை புவனேஷ்வரில் உள்ள யூனிவர்சிட்டியில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு திரையிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் பொதுவெளியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிட்டுள்ளனர். இதன் காரணமாக அவரது அடுத்தப் படம் எதற்கும் துணிந்தவனுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.

2022 பிப்ரவரி 4 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என படத்தை தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதன் காரணமாக காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11ம் தேதி வெளியிடுவதாக இருந்த சிவகார்த்திகேயனின் டான் படத்தை பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி தமிழ்ப் படங்கள் எதற்கும் துணிந்தவனுக்கு வழிவிட, பிற மொழிப் படங்கள் பல போட்டியாக வந்துள்ளன.
முக்கியமாக சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா பிப்ரவரி 4-ல் வெளியாகிறது.

also read : படக்குழுவினருக்காக சமைத்த அருண் விஜய் - புகைப்படங்கள்

தமிழகத்தில் அதன் தாக்கம் இருக்காது எனினும், எதற்கும் துணிந்தவனின் தெலுங்குப் பதிப்புக்கு ஆச்சார்யா பெரும் சவாலாக இருக்கும். தற்போது சபாஷ் மித்து படத்தை பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்துள்ளார். இந்தி மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படத்தை 'டப்' செய்து வெளியிட உள்ளனர்.

இன்னும் பல படங்கள் பிப்ரவரி 4 ஆம் தேதியை குறி வைத்துள்ளன. எனினும் தமிழகத்தில் எதற்கும் துணிந்தவனுக்கு அவற்றால் பெரிய அளவில் நெருக்கடி இல்லை என்பது ஆறுதல்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Surya

அடுத்த செய்தி