சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்காக ஆன்லைன் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகிறது இந்த பல்கலைக்கழகம்: என்ன காரணம்?

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்காக ஆன்லைனில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது டெல்லி தொழில்நுட்பப் பல்கலைகழகம்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்காக ஆன்லைன் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகிறது இந்த பல்கலைக்கழகம்: என்ன காரணம்?
சுஷாந்த் சிங் ராஜ்புத்
  • Share this:
தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்காக ஆன்லைனில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது டெல்லி தொழில்நுட்பப் பல்கலைகழகம்.

2003-ஆம் ஆண்டு டெல்லி தொழில்நுட்பப் பல்கலையில் பொறியியல் மாணவராகச் சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், 3-வது வருடத்தில் சினிமா கனவுகளைத் துரத்துவதற்காக படிப்பை நிறுத்திக்கொண்டிருக்கிறார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய டெல்லி தொழில்நுட்பப் பல்கலையின் துணை வேந்தர் யோகேஷ் சிங், “டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அவர் பொறியியல் படிப்பில் சேர்ந்தபோது, இந்திய அளவில் அவர் 7-வது ரேங்க்கில் இருந்தார்.  அவர் சிறந்த மாணவர்” என்று கூறியிருக்கிறார்.


அவரது ஹிட் திரைப்படமான ச்சிசோர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்த அவர், ”.இங்கிருக்கும் அனைவரிலும் நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். எனக்கு எல்லாவற்றையும் இந்த பல்கலைக்கழகம் கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் சுஷாந்துக்காக ஆன்லைனில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
கொரோனா அறிகுறிகள் என்னென்ன? எந்த வயதினருக்கு மாறுபடும்? - சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் புது அப்டேட் ..
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading