மகான் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சியான் விக்ரமின் 60-வது படமாக 'மகான்' திரைப்படம் உருவாகியிருந்தது. இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்திருந்தார். பழிவாங்கலுடன் கூடிய ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த 'மஹான்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது, படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் நீக்கப்பட்ட மூன்று காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
அவற்றில் வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சி அதிகம் பேசப்பட்டு வருகிறது. மகான் படத்தில் வாணி போஜன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோவிட்-19 சூழ்நிலை காரணமாக அவரது பகுதிகளின் படப்பிடிப்பை முடிக்க முடியவில்லை. இதனால் விக்ரம் மற்றும் வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருமணத்திற்குப் பிறகு ஆதி - நிக்கி கல்ராணியின் எமோஷனல் போஸ்ட்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மூலம் லலித் குமார் தயாரித்த இந்தப் படத்தில், விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அதோடு மகான் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் 'சேதுபதி', 'மாரி 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' புகழ் மாஸ்டர் ராகவனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.