Home /News /entertainment /

இணையத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட சண்டைக் காட்சி!

இணையத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட சண்டைக் காட்சி!

சூரரைப்போற்று

சூரரைப்போற்று

விமான வணிகத்தைத் தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சூரரைப்போற்று திரைப்படம் உருவானது.

    சூரரைப்போற்று திரைப்படத்தில் நீக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. 

    இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், தேசிய அளவில் பல விருதுகளையும் பெற்றுள்ளது. 2020-ஆம் ஆண்டு அமேசான் OTT தளத்தில் வெளியான இப்படம், சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் தற்போது, அக்ஷய் குமார் நடிப்பில் ‘உடான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே தற்போது சூரரைப் போற்று ​​படத்திலிருந்து நீக்கப்பட்ட சண்டைக் காட்சி ஒன்று ஆன்லைனில் வெளியாகியுள்ளது. ‘மாறன்’ வேடத்தில் இருக்கும் சூர்யாவை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர் ரசிகர்கள். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இந்தக் காட்சி இந்தி ரீமேக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஐந்து விருதுகளை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பெற்றது. சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய ஐந்து பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மக்கள் தொகைக்கு ஏற்கனவே பங்களித்து விட்டோம் - கர்ப்பம் குறித்த வதந்திக்கு கரீனா கபூர் பதிலடி



    குறைந்த செலவில் அனைத்துத் தரப்பினருக்கும் விமானசேவை கிடைக்க, விமான வணிகத்தைத் தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சூரரைப்போற்று திரைப்படம் உருவானது. படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியம், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya, Tamil Cinema

    அடுத்த செய்தி