Home /News /entertainment /

அட்லியின் ஜவான் படப்பிடிப்புக்கு குட் பை சொன்ன தீபிகா படுகோன்!

அட்லியின் ஜவான் படப்பிடிப்புக்கு குட் பை சொன்ன தீபிகா படுகோன்!

நடிகை தீபிகா படுகோன்

நடிகை தீபிகா படுகோன்

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை சமீபத்தில் உறுதி செய்த விஜய் சேதுபதி, விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அட்லீயின் ஜவான் படத்திற்கான படப்பிடிப்பை முடித்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். 

    கடந்த வாரம், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஜவான் படப்பிடிப்புக்காக ஷாருக்கானுடன் சென்னை வந்தார். ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், தீபிகா படுகோன் தனது கதாபாத்திரத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் என்பது லேட்டஸ்ட் தகவல்.

    ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காவல் நிலையத்தில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை சமீபத்தில் உறுதி செய்த விஜய் சேதுபதி, விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    என் அறையிலிருந்து அழகான புதாபெஸ்ட்... படங்களைப் பகிர்ந்த இளையராஜா!

    இந்தப் படத்தின் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் விசாரணை அதிகாரியாகவும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜவான் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார். இவர்களுடன் சன்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ரிலீஸாகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Atlee, Deepika Padukone

    அடுத்த செய்தி