இப்படித்தான் வாழ்கிறோம் - வாட்ஸ்அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்தார் தீபிகா படுகோன்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடும்ப வாட்ஸ் அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, ”குடும்பத்தில் ஒருவருக்கு மகிழ்ச்சியென்றாலும், அதில் அனைவரும் பங்கேற்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படித்தான் வாழ்கிறோம் - வாட்ஸ்அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்தார் தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
  • Share this:
குடும்பத்தைக் குறித்தும், சமூக கருத்தாக்கங்களைக் குறித்தும் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்காதவர் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடும்ப வாட்ஸ் அப் குரூப்பின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, ”குடும்பத்தில் ஒருவருக்கு மகிழ்ச்சியென்றாலும், அதில் அனைவரும் பங்கேற்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீபிகா படுகோன் பதிவிட்ட ஸ்க்ரீன்ஷாட்


கணவரும், பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங்கின் சமீபத்தில் வெளியான நேர்காணல் குறித்து, தனது தாய், தந்தை, மாமனார் ஜக்ஜீத் சிங் பாவ்னானி ஆகியோர் கருத்து தெரிவித்து, வாழ்த்தியிருக்கும் ஸ்க்ரீன்ஷாட்டை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர், “குடும்பம் இப்படித்தான் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியிலும் பங்கேற்றுக்கொள்கிறது. இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கும், உற்சாகமடைவதற்கும் இவர்களின் வாழ்த்துதான் காரணமாக இருக்கிறது. அவர்களின் வாழ்த்து மதிப்புக்குரியது” என்று பதிவிட்டிருக்கிறார் தீபிகா.இந்த லாக்டவுன் நேரத்தில் மன ரீதியாக ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களுக்காக தனது Live Laugh Love அறக்கட்டளை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மன நலன் தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார் தீபிகா படுகோன்.
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading