யாரும் இங்கு தனியாக இல்லை: அனைத்துக்கும் மேலாக நம்பிக்கை இருக்கிறது - தீபிகா படுகோன்

இங்கு யாரும் தனியாக இல்லை. அனைத்திற்கும் மேலாக நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

யாரும் இங்கு தனியாக இல்லை: அனைத்துக்கும் மேலாக நம்பிக்கை இருக்கிறது - தீபிகா படுகோன்
deepika
  • Share this:
மனநல பிரச்சனைகளோடு வாழ்ந்த எனக்கு பிரச்சனைகளை குறித்து பேச ஒருவர் வேண்டும் என்பதைச் சொல்வது முக்கியமானதாகிறது. இங்கு யாரும் தனியாக இல்லை. அனைத்திற்கும் மேலாக நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட தீபிகா படுகோன், “பேசுங்கள், தொடர்புகொள்ளுங்கள், உதவியைப் பெறுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், ”ஊடகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். குற்றவாளிகள் குற்றமிழைக்கிறர்கள். தற்கொலை செய்து கொள்பவர்கள் குற்றமிழைப்பதில்லை, அவர்கள் மிக ஆழ்ந்த வேதனையில் இறக்கிறார்கள். people dont commit suicide, they die by suicide எனத் தெரிவித்திருக்கிறார்.
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading