Home /News /entertainment /

போதைப்பொருள் விவகாரம் - பிரபல நடிகைகளுக்கு சம்மன்

போதைப்பொருள் விவகாரம் - பிரபல நடிகைகளுக்கு சம்மன்

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகள்

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் நான்கு பிரபல நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் போதைப் பொருள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சுஷாந்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஷௌவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுயல் மிரண்டா, தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 16 பேரை போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பல பாலிவுட் நடிகைகளுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது.

    மேலும் தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷூக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அவரைத் தொடர்ந்து தற்போது தீபிகா படுகோனுக்கு சம்மனுக்கு அனுப்பியுள்ளனர். அவரைத் தொடர்ந்து சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    நடிகர் சைஃப் அலிகான், அம்ரிதா சிங் தம்பதியின் மகள் சாரா அலிகான். மூத்த பாலிவுட் நடிகர் ஷக்தி கபூரின் மகள். தீபிகா படுகோன் பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள். இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    தீபிகா படுகோன் வெள்ளிக்கிழமை அன்றும் மற்ற நடிகைகள் நாளையும் விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று கூறப்படுகிறது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Bollywood, Deepika Padukone, Rakul preet singh, Sushant Singh Rajput

    அடுத்த செய்தி